ETV Bharat / bharat

Gyanvapi Mosque survey: ஞானவாபி மசூதி ஆய்வு; கூடுதல் அவகாசம் கோரும் இந்தியத் தொல்லியல் துறை.! - இஸ்லாமியர்கள்

Gyanvapi Mosque survey: ஞானவாபி மசூதி ஆய்வுக்கு மேலும் எட்டு வாரம் கால அவகாசம் கோரிய இந்தியத் தொல்லியல் துறையின் மனுவின் மீது வாரணாசி மாவட்ட நீதிமன்றம் செப்டம்பர் 8-ஆம் தேதி விசாரணை மேற்கொள்கிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 10:45 PM IST

வாரணாசி: ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த இந்தியத் தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து அஞ்சுமான் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி என்ற இஸ்லாமியர்கள் தரப்பு தாக்கல் செய்த மனுவைக் கடந்த மாதம் ஆகஸ்ட் 3ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய 8 வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்குமாறு இந்தியத் தொல்லியல் துறை (ASI) அனுமதி கோரியுள்ளது.

ஏற்கனவே வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (செப்2) முடிவடைந்த நிலையில், ஆய்வு மேற்கொள்ள மேலும் 8 வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவின் மீது வரும் 8ஆம் தேதி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

அந்த மனுவில் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு முழுமையாக முடிவடையவில்லை எனவும் இதனால் மேலும் 8 வாரங்கள் கூடுதல் அவகாசம் வேண்டும் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின் போது வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ள ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கி அதன் அறிக்கையைச் செப்டம்பர் 2ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிங்க: Pragyan Rover: நிலவில் சதமடித்த பிரக்யான் ரோவர்... அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்கும் இந்தியா!

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதியின் வளாகத்தில் சிரிங்கர் கவுரி சன்னதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்கள் சென்று வழிபட அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கவுரி சன்னதிக்கு தினமும் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி, 5 பெண்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதற்கு மசூதி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆய்வு முடிவில் மசூதி வளாகத்தில் சிவலிங்கம் போன்ற பொருள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த மசூதி நிர்வாகம், தொழுகைக்கு வருபவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட நீரூற்று என்றும் சிவலிங்கம் இல்லை என்றும் முறையிட்டது.

இப்படிப் பல காரணங்களைக் கருத்தில் கொண்டு ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த இந்தியத் தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து அஞ்சுமான் இன்டெஜாமியா மஸ்ஜித் குழு தரப்பு தாக்கல் செய்த மனுவைக் கடந்த மாதம் ஆகஸ்ட் 3ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Aditya L1 Launch: ‘ஆதித்யா எல்-1 பயணம் இந்தியாவிற்கு ஒளி வீசும் தருணம்’ - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.