டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டிய 25 பேரைக் கைது அம்மாநில காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குப் பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியும் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் போஸ்டரில், 'நமது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசிகளை ஏன் வெளிநாட்டிற்கு அனுப்பினீர்கள் மோடி ஜி?' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த வாசங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, 'என்னையும் கைது செய்யுங்கள்' என சவால்விடும் தொனியில் கூறியுள்ளார். மேலும் தனது ட்விட்டர் ப்ரொபைல் புகைப்படமாக அந்த வாசகங்களை வைத்துள்ளார்.
-
Arrest me too.
— Rahul Gandhi (@RahulGandhi) May 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
मुझे भी गिरफ़्तार करो। pic.twitter.com/eZWp2NYysZ
">Arrest me too.
— Rahul Gandhi (@RahulGandhi) May 16, 2021
मुझे भी गिरफ़्तार करो। pic.twitter.com/eZWp2NYysZArrest me too.
— Rahul Gandhi (@RahulGandhi) May 16, 2021
मुझे भी गिरफ़्तार करो। pic.twitter.com/eZWp2NYysZ
மற்றொரு காங்கிரஸ் தலைவரான பவன் கேரா, அரசிடம் மக்கள் கேள்வி எழுப்பியதில் என்னத் தவறு உள்ளது எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தப் போஸ்டர் சம்பவத்தில் மேலும் தொடர்புடைய நபர்களை டெல்லி காவல் துறையினர் சிசிடிவி பதிவுகள் வாயிலாகத் தேடிவருவதாகவும், அவர்கள் பிடிபடும்பட்சத்தில் அவர்கள் மீதும் வழக்குப் பதியப்படும் எனவும் டெல்லி காவல் துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’கரோனா மரணங்களை மறைக்கிறதா குஜராத் அரசு...’ பரபரப்பைக் கிளப்பும் ப.சிதம்பரம்!