பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை என்றும், குடியரசுத் தலைவருக்கே முழு அதிகாரமிருப்பதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாகவும் எனவே உரிய முடிவை விரைந்து எடுக்கவும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனிடையே, ஆளுநரின் இந்த முடிவுக்கு முன்னாள் நீதிபதிகளும், பல்வேறு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது டிவிட்டர் பக்கத்தில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவை முடிவை அவமதித்து, அரசமைப்பு வழங்கும் மாநில உரிமையையும் கேலி செய்திருக்கிறார் ஆளுநர். என்ன செய்வதம்மா? என பலரும் கொதிப்போடு கேட்டபடி உள்ளனர்.
ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? பதிலை மாநில அரசுதானே சொல்ல வேண்டும்? செயல்பட வேண்டும்?” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’ஆளுநர் நாடகம் ஆடுகிறார்’ - துரைமுருகன் கண்டனம்!