இந்திய ராணுவத்திற்கு 1,300 லைட் ஸ்பெஷலிஸ்ட் வாகனங்களை (Light Specialist Vehicles) ரூ.1,056 கோடி செலவில் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த வாகனங்களை நான்கு ஆண்டுகளுக்கு ராணுவப் படையில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். இவற்றில் மெஷின் துப்பாக்கிகள், தானியங்கி குண்டுகள் ஏவுதல், ஏவுகணையைத் தடுக்கும் கருவிகள் எனப் பல்வேறு சிறப்பு வசதிகள் பொருத்தப்பட்டுள்ளதால், இவை போர் சமயத்தில் ராணுவ வீரர்களுக்கு உதவியாக அமைந்திடும்.
இந்த வாகனத்தை மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் லிமிடெட் (எம்.டி.எஸ்.எல்) நிறுவனம் தயாரிக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் இந்த வாகனம், பாதுகாப்புத் துறையின் முதன்மை திட்டமாகும். அதேபோல, மத்திய அரசின் 'ஆத்ம நிர்பார் பாரத் திட்டம்', 'மேக் இன் இந்தியா' திட்டம் ஆகியவற்றில் புதிய மைல்கல்லை எட்டும் முயற்சியாகவும் இது கருதப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: லாக்டவுனுக்கு எதிராகப் போராட்டம்: லண்டனில் 33 பேர் கைது