ETV Bharat / bharat

வேலியே பயிரை மேய்ந்தது - இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரர்கள்! - Army jawans rape two women in uttar pradesh

வேலியே பயிரை மேய்ந்த கதை போல், உத்தரபிரதேசத்தில் இரு பெண்களை, ராணுவ வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 3, 2023, 10:06 AM IST

ஜான்சி : செல்போன் வாங்குவது போல் இரு பெண்களை ரயிலின் ராணுவ வீரர்களுக்கான பெட்டிக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் விராங்க லட்சுமி பாய் ரயில் நிலையத்திற்கு இரு பெண்கள் வந்து உள்ளனர். தங்கள் உறவினர்களை காண வந்த இரு பெண்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட ராணுவ வீரர், தன்னுடைய செல்போன் செயலிழந்து போனதாகவும், உறவினரிடம் பேச செல்போன் தருமாறும் அந்த பெண்களிடம் கேட்டு உள்ளார்.

பெண்களிடம் இருந்து செல்போன் வாங்கிய ராணுவ வீரர், செல்போனுடன் ராணுவ வீரர்களுக்கான பெட்டியில் ஏறிக் கொண்டதாக கூறப்படுகிறது. செல்போனை திருப்பித் தருமாறு பெண்கள் கேட்ட நிலையில், ராணுவர் வீரர் ரயில் பெட்டியினுள் ஏறுமாறு பெண்களை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பிரதமர் மோடி அவதூறு வழக்கு - ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு!

ராணுவ வீரரை பின் தொடர்ந்து இரு பெண்களும் ரயில் பெட்டியினுள் ஏறிய நிலையில், அங்கு ஏற்கனவே இரு ராணுவ வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ராணுவ வீரர்கள் சேர்ந்து இரு பெண்களையும் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண்கள் அளித்த புகாரில் ரயில் நிலையம் வந்த போலீசார், ரயில்வே போலீசார் உதவியுடன், இரு ராணுவ வீரர்களை கைது செய்தனர்.

3வது ராணுவ வீரர் தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் பெண்களிடம் விசாரணை நடத்தினர். தலைமறைவான ராணுவ வீரரை தேடும் பணியில் ரயில்வே போலீசார் மற்றும் மாநில போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த சம்பவம் போல் ராணுவ வீரர்கள், இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் அண்மையில் கேராளாவில் ஒரு சம்பவம் அரங்கேறியது. எர்ணாகுளம் - ஆழப்புழா இடையிலான ராஜதானி விரைவு ரயிலில் பயணித்த இஸ்லாமிய பெண், மது போதையில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் தன்னுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். இது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் பெண் பொய் கூறியது இறுதியில் தெரிய வந்தது.

இதையும் படிங்க : ரயிலில் பயணி பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி - 3 பேர் பலி - தீ விபத்தில் தப்ப விபரீத முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.