ETV Bharat / bharat

எல்லை பாதுகாப்பில் சமரசம் இல்லை - ராணுவ தளபதி நரவனே - இந்தியா சீனா எல்லை மோதல்

நாட்டின் வடக்குப் பகுதி எல்லையில் ராணுவ வசதிகள் மேம்படுத்தப்பட்டு, படைகள் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ தளபதி எம்.எம். நரவனே தெரிவித்துள்ளார்.

Army Chief Naravane
Army Chief Naravane
author img

By

Published : Jan 12, 2022, 3:34 PM IST

ராணுவத் தளபதி முகுந்த் நரவனே இன்று வருடாந்திர செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது அவர் பல்வேறு வடக்கு எல்லை பாதுகாப்பு, இந்தியா சீனா மோதல், நாகாலாந்து துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

அவர் கூறியதாவது, இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சிகள் தொடர்ந்து அரங்கேறிவருகிறது. பயங்கரவாத செயல்களை நாட்டின் எல்லையில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வடக்கு, மேற்கு எல்லைப் பகுதியில் ராணுவ கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டு, படைகள் உஷார் நிலையில் உள்ளன.

சீனாவுடனான மோதல் போக்கை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளை, ராணுவம் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

கடந்த டிசம்பர் நான்காம் தேதி நாகாலாந்தில் பொது மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என நரவனே தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: PM security breach: பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.