டெல்லி: ஆப்பிள் நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டமான iOS 16- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், புதிய லாக் ஸ்கிரீன்களுடன் புதிய விட்ஜெட்கள், புதிய கீபோர்டு ஹாப்டிக்ஸ், புதிய ஹோம் ஆப் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய iOS 16- ல், ஐபேட் ஓஎஸ் அப்டேட் செய்யப்படவில்லை என்றும், அது iPadOS 16.1 ஆக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
iOS 16 -ல், லாக் ஸ்கிரீன் மேம்படுத்தப்பட்டுள்ளது, அதில் பயனர்கள் நோட்டிஃபிகேஷன்களை வழங்கக்கூடிய விட்ஜெட்களைச் சேர்க்கலாம். iMessage -லும் சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒரு மெசேஜை அனுப்பிய பிறகு 15 நிமிடங்கள் வரை அதை எடிட் செய்ய முடியும், இரண்டு நிமிடங்களுக்குள் அதை நீக்க முடியும்.
ஆடியோ மெசேஜ்களுக்கு 'mark as unread' அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. iOS 16, ஐஃபோன் பயனர்கள் சஃபாரியில் உள்ள டேப் குழுக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இதில் ஹோம் ஆப்கள், ஆப்பிள் வாட்சைக் கட்டுப்படுத்தும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஐஃபோன் பயனர்கள், வீடியோக்களில் இருந்து டெக்ஸ்டை காப்பி செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஐஃபோன் 8 பயனர்களுக்கு இந்த புதிய ஐஓஎஸ் இலவச சாஃப்ட்வேர் அப்டேட்டாக கிடைக்கிறது.