காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே.ஆண்டனியின் மாநிலங்களவை பதவிக்காலம், வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஐந்து முறை மாநிலங்களை உறுப்பினராக இருந்துள்ள ஆண்டனி, அடுத்த முறை தான் போட்டியிடப் போவதில்லை என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை பதவிக்காலம் முடிந்ததும் சொந்த மாநிலமான கேரளவுக்குத் திரும்பும் எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறிய ஆண்டனி, மாநில அரசியலிலும் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
80 வயதான ஆண்டனி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் எட்டாண்டு காலம் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அத்துடன் கேரள முதலமைச்சராக மூன்று முறை இருந்துள்ளார். அவரது மூத்த மகன் அனில் ஆண்டனி காங்கிரசின் டிஜிட்டல் மீடியா அணியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
இதையும் படிங்க: நலத்திட்டம் என்றால் பாஜக, ஊழல் என்றால் மம்தா - அமித் ஷா பேச்சு