ETV Bharat / bharat

டெல்லி ஷாகின் பாக்கில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்! - டெல்லி ஷாகின் பாக்கில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

சில தினங்களாக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை எதிர்த்து மக்கள் போராடிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

டெல்லி ஷாகின் பாக்கில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும்  பணி தொடக்கம்!- புல்டவுசர்களை களமிறக்கிய டெல்லி மாநகராட்சி

author img

By

Published : May 10, 2022, 4:07 PM IST

டெல்லி: டெல்லி மாநகராட்சி ஷாகின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் இப்பணிக்காக புல்டவுசர் வண்டிகளை டெல்லி மாநகராட்சி நியு ஃப்ரண்ட்ஸ் காலனிக்கு கொண்டு வந்துள்ளது.

சென்ற திங்கள் (மே3) அன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் பலர் போராடினர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது குறித்து தெற்கு டெல்லி மாநகராட்சியின் மத்திய மண்டலத் தலைவர் ராஜ்பால் சிங் கூறுகையில், ‘நியூ பிரண்ட்ஸ் காலனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

எங்கள் அமலாக்கக் குழுக்கள் போதுமான போலீஸ் படை மற்றும் புல்டோசர்கள் மற்றும் லாரிகள் போன்ற உபகரணங்களுடன் பௌதா தர்மா கோவில், குருத்வாரா சாலை மற்றும் நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனியின் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டங்கள், குடிசைகள் மற்றும் கடைகளை அகற்றத் தொடங்கியுள்ளன எனத் தெரிவித்தார்.

நியு ஃப்ரண்ட்ஸ் காலனி SDMC (தெற்கு டெல்லி மாநகராட்சி)யின் மத்திய மண்டலத்தின் கீழ் வருகிறது. ஷாகின் பாக்கில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனதுல்லா கான் மீதும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்ததற்காக புகார் பதிவு செய்யப்பட்டது.

ஷாகின் பாக் இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக CPIM கட்சியினர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது, அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பஞ்சாப் குண்டுவீச்சு சம்பவம்: முதலமைச்சர் பகவந்த மான் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.