பதின்டா : பஞ்சாப்பில் உள்ள பதின்டா ராணுவ மையத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பீரங்கிப் பிரிவைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நான்கு வீரர்களில் இரண்டு பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் சாகர் பன்னே, கமலேஷ், யோகேஷ் குமார், சந்தோஷ் நகரா என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இதில், கமலேஷ் எனபவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அடுத்த பெரிய வனவாசி பனங்காடு பகுதியாகும். இதே போல் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 19 வயதான யோகேஷ் குமார், தேனி மாவட்டம், தேவாரம் அடுத்த மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்து உள்ளது. மற்ற இரு வீரர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தது இருவரின் கிராமத்தை உலுக்கியது. கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இருவரது உடல்களையும் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி சீல் வைக்கப்பட்டு, பஞ்சாப் காவல் துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் இணைந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 28 ரவுண்டுகள் கொண்ட இன்சாஸ் ரக துப்பாக்கி காணாமல் போனதாக ராணுவம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்து இதிருந்தனர்.
மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பயங்கரவாத தாக்குதலா அல்லது ராணுவ வீரர்களுக்குள் நடந்த மோதலா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்சாஸ் ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த துப்பாக்கியில் குண்டுகள் உள்ளனவா, துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அதுதானா என தடயவியல் சோதனைக்கு பின்னர் தெரியவரும் என கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில், அதே பதின்டா ராணுவ மையத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்ட்ரி பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது தவறுதலாக துப்பாக்கிச் சுட்டதில் வீரரின் தலையில் குண்டடி காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் காயத்தின் தீவிரத் தன்மை காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
உயிரிழந்த வீரர் குருதேஜஸ் லஹூராஜ் எனறும், அவரது சடலம் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டடு உள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பிரேதே பரிசோதனைக்கு பின் வீரரின் உடல் சொந்த ஊர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பதின்டா ராணுவ மையத்தில் கடந்த இரண்டு நாட்களில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு வீரர்கள் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
An Army jawan died of a bullet injury as his service weapon went off accidentally in Punjab's Bathinda last night. The deceased jawan has been identified as Laghu Raj Shankar: Gurdeep Singh, SHO, Bathinda Cantt Police Station
— ANI (@ANI) April 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
(file pic) pic.twitter.com/y94XLFjs57
">An Army jawan died of a bullet injury as his service weapon went off accidentally in Punjab's Bathinda last night. The deceased jawan has been identified as Laghu Raj Shankar: Gurdeep Singh, SHO, Bathinda Cantt Police Station
— ANI (@ANI) April 13, 2023
(file pic) pic.twitter.com/y94XLFjs57An Army jawan died of a bullet injury as his service weapon went off accidentally in Punjab's Bathinda last night. The deceased jawan has been identified as Laghu Raj Shankar: Gurdeep Singh, SHO, Bathinda Cantt Police Station
— ANI (@ANI) April 13, 2023
(file pic) pic.twitter.com/y94XLFjs57
இதையும் படிங்க : India Corona: மீண்டும் உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு.. மீண்டும் லாக்டவுனை நோக்கி செல்கிறதா இந்தியா?