ETV Bharat / bharat

தெலங்கானாவில் தொடரும் ஆணவக்கொலை: பெற்றோரே மகளைக் கொலை செய்த கொடூரம்! - பெற்றோரே மகளை கொலை செய்த கொடூரம்

தெலங்கானாவில் வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர், சொந்த மகளையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவக்கொலை
ஆணவக்கொலை
author img

By

Published : May 27, 2022, 10:34 PM IST

அடிலாபாத் (தெலங்கானா): அடிலாபாத், நாகல்கொண்டாவில் வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞரை மகள் காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் சொந்த மகளையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், அடிலாபாத், நாகல்கொண்டா பகுதியைச் சேர்ந்த சமித்ரி பாய்- தேவி லாலா தம்பதியினரின் மகள் ராஜேஸ்வரி (20). இவரும் ஷேக் அலீம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச்சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர் அவர்களது திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ராஜேஸ்வரி, அலீம் இருவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி 45 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, ராஜேஸ்வரியின் பெற்றோர் மகளைக் காணவில்லை என நர்னூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்களின் செல்போன் சிக்னல்களைக்கொண்டு தேடியதில் மகாராஷ்டிராவில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையினர் ராஜேஸ்வரி, அலீமை தெலங்கானா அழைத்து வந்தனர். ராஜேஸ்வரியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அலீமை காவல்துறையினர் அழைத்துச்சென்றனர்.

ராஜேஸ்வரி வேறு மதத்தைச்சேர்ந்தவரை திருமணம் செய்து அவமானப்படுத்தியதாக அவரது பெற்றோர் கடும் கோபத்தில் இருந்து வந்தனர். இது தொடர்பாக ராஜேஸ்வரிக்கும், அவரது பெற்றோருக்கும் தினமும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று (மே 27) அதிகாலை 4 மணியளவில் பெற்றோர் ராஜேஸ்வரியைக் கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து காவல் துறையினர் ராஜேஸ்வரியின் பெற்றோர் சமித்ரி பாய் - தேவி லாலா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். உயிரிழந்த ராஜேஸ்வரியின் உடலை ஊட்னூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தெலங்கானாவில் அண்மைக்காலமாக ஆணவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக வேறு மதத்தைச்சேர்ந்த இளைஞனை சகோதரி திருமணம் செய்த கொண்ட ஆத்திரத்தில் போக்குவரத்து நிறைந்த சாலையில் சகோதரி கண்முன்னே அவரது கணவனை பெண்ணின் சகோதரன் உறவினர்களிடம் சேர்ந்து கொலை செய்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: Honour Killing: காலில் விழுந்து கதறிய தங்கை- கருணை இல்லாமல் கணவனைக் கொன்ற அண்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.