டெல்லி: ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் குறுக்கே உலகின் மிகவும் உயரமான ரயில்வே பாலத்தின் கட்டுமான பணி இன்றோடு முடிவடைந்தது.
இந்திய ரயில்வே சார்பில், ரியாசி மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் மேல் 359 மீட்டர் உயரத்தில் புதிதாக ஒரு பாலம் கட்டுமான பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தன.
இந்தப் பாலம் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் அதிக உயரம் கொண்டதாகும். தற்போது, பாலத்தின் இரு பகுதிகளுக்கு நடுவே பிரதான வளைவை பொருத்தும் பணி தொடங்கி உள்ளது
அதேநேரம் இரு பக்கங்களிலும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். சுமார் 111 கி.மீ. தொலைவு கொண்ட கத்ரா மற்றும் பனிஹால் பகுதியை இந்தப் பாலம் இணைக்கும். மேலும், ரிக்டர் அளவுகோளில் 8 புள்ளிகள் வரையிலான நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மணிக்கு 90 கி.மீ. வரை காற்றின் வேகம் இருக்கும் வரை இந்தப் பாலத்தின் மீது ரயில் ஓடும். அதைத் தாண்டினால் தானியங்கி சமிக்ஞை முறையில் போக்குவரத்து தானாகவே நிறுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாலம் 1315 மீட்டர் உயரம் கொண்டது. உலகிலேயே, மிக அதிகம் உயரம் கொண்ட ரயில்வே பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சசிகலா பெயரை சேர்க்காவிடில் தேர்தலை ஒத்திவையுங்கள்- அமமுக ஆவேசம்