புதுச்சேரி: கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதைத் தொடர்ந்து புதுச்சேரியில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. நோய்த் தொற்றைத் தடுக்கவும் 100 சதவீத தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற அரசு பல்வேறு முகாம்களை நடத்தி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதன் பயனாக முதல் தவணை ஊசியை 7,70,000 பேரும், இரண்டாவது தவணை ஊசியை 4,48,000 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். 77 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில் விடுபட்டவர்கள் சிறப்பு முகாம்களில் செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும் சிலர் முன்வராத காரணத்தினால் கட்டாயம் கரோனா தடுப்பூசி சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி பொதுச் சுகாதார சட்டம் 1973இன் பிரிவு 54(1)விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மீறி வெளியே நடமாடினால் தண்டிக்கப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாகாலாந்தில் கலவரம்: பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 12 பலி