ETV Bharat / bharat

கிராமம் ஒன்று..! எம்.எல்.ஏ மட்டும் ரெண்டு..! அரசியல் ஆச்சரியம் நிறைந்த அஞ்சோரா கிராமம்! - ஐந்து மாநில தேர்தல் குறித்த செய்திகள்

Anjora Village in Chhattisgarh Elects Two MLA: சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள அஞ்சோரா கிராமம் இரு சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய உள்ளது. அஞ்சோரா கிராமத்திலுள்ள ஒரு சாலையின் ஒரு புறம் ராஜ்நந்த்கான் சட்டமன்றத் தொகுதியாகவும் மறுபுறம் துர்க் சட்டமன்றத் தொகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

anjora-a-chhattisgarh-village-that-elects-two-mlas-at-a-time
இரண்டு எம்எல்ஏக்களை தேர்வு செய்யும் அஞ்சோரா கிராமம் எங்கு உள்ளது?...
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 5:14 PM IST

ராஜ்நந்த்கான் (சத்தீஸ்கர்): சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிற உள்ளது. இதில் நாளை (நவ.7) முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பின் நவம்பர் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் இரண்டு சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் அஞ்சோரா கிராமம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கிய கிராமமாக அஞ்சோரா கிராமம் இருந்து வருகிறது.

அஞ்சோரா கிராமத்திலுள்ள ஒரு சாலை அந்த கிராமத்தை இரண்டாகப் பிரிக்கிறது. இதில், சாலையின் ஒருபுறம் ராஜ்நந்த்கான் (Rajnandgaon) தொகுதியின் கீழ் வருகிறது. மறுபுறம் துர்க் (Durg) தொகுதியின் கீழ் வருகிறது. இதனால் இந்த கிராமம் அரசியல் முக்கியத்துவம் மற்றும் தனித்துவமானதாக இருந்து வருகிறது.

துர்க் நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அஞ்சோரா கிராமம் அமைந்துள்ளது. மும்பை - ஹவுரா தேசிய நெடுஞ்சாலை இந்த கிராமத்தை இரண்டாகப் பிரிக்கிறது. நிர்வாக ரீதியாகவும் அஞ்சோரா கிராமம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், ராஜ்நந்த்கான் தொகுதிக்கு உட்பட்ட பகுதி அஞ்சோரா கிராம பஞ்சாயத்து என்றும் மற்றும் துர்க் தொகுதிக்கு உட்பட்ட பகுதி அஞ்சோரா ஹா (பி) பஞ்சாயத்து என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் சுவாரஸ்யமானது என்றால் தேர்தல் நேரங்களில் ஒரே கட்சிகளைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவதும், அஞ்சோரா கிராமத்தில் ஒரே கட்சியின் இரு தொகுதி வேட்பாளர்களின் வேறு வேறு பேனர்கள், போஸ்டர்கள் ஓட்டப்படுவதுதான்.

அஞ்சோரா பஞ்சாயத்தின் கிராமத் தலைவராகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்து அஞ்சு சாஹூ இது குறித்துக் கூறும் போது, “இந்த கிராமம் இரண்டு தொகுதிகளால் பிரிக்கப்பட்டு இருந்தாலும் இங்கு இருக்கக் கூடிய மக்கள் திருவிழாக்கள் மற்றும் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் ஒன்று கூடிக் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், என்னுடைய பூர்வீகம் அஞ்சோரா ஹா (பி) கிராம பஞ்சாயத்திலும், எனது மனைவியின் வீடு அஞ்சோரா கிராமத்தில் உள்ளது. மேலும், இரண்டு தொகுதிகளால் பிரிக்கப்பட்டு இருந்தாலும் இக்கிராம மக்கள் அமைதியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

1973ஆம் ஆண்டு துர்க் மாவட்டத்திலிருந்து ராஜ்நந்த்கான் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. அதன் பின்பே அஞ்சோரா கிராமம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அஞ்சோரா கிராமத்திலுள்ள இரண்டு தொகுதிகளும் மிக முக்கிய தொகுதிகளாகும்.

2023 சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலில் ராஜ்நந்த்கான் தொகுதியில் பா.ஜ.க சார்பில் முன்னாள் முதல்வர் ரமன் சிங்கும், காங்கிரஸ் கட்சி சார்பில் கிரிஷ் தேவநாகன் போட்டியிடுகிறார்கள். அதே போல் துர்க் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக உள்துறை அமைச்சர் தமரந்த்வாஜ் சாஹூ மற்றும் பா.ஜ.க கட்சி சார்பாக லலித் சந்திரகர் போட்டியிடுகின்றனர்.

இந்தியத் தேர்தல்களின் பன்முகத்தன்மையை விளக்கும் படியாக சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள அஞ்சோரா கிராமம் இருந்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது எனக் கூறலாம்.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு, விவசாய கடன் தள்ளுபடி என சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதிகள் விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.