ETV Bharat / bharat

சுயதொழில் மூலம் தன்னிறைவு பெறலாம் - தொழில் முனைவோருக்கு உத்வேகம் அளிக்கும் ஹல்த்வானி இளைஞர்! - சோலார் மின் உற்பத்தி நிலையம் மூலம் வருவாய் ஈட்டும் இளைஞர்

ஹல்த்வானியில் அரசின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர், சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைத்து, தான் வருவாய் ஈட்டுவதோடு கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி வருகிறார்.

anil
anil
author img

By

Published : Aug 6, 2022, 1:51 PM IST

ஹல்த்வானி: கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள், வேலை தேடி நகரங்களுக்கு இடம்பெயர்வதே வாடிக்கையாக உள்ளது. மாறாக கிராமங்களிலேயே சுயதொழில் செய்ய முனைவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சுயதொழில் செய்ய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கினாலும், துணிந்து அதில் இறங்க பெரும்பாலானோர் தயங்குகின்றனர்.

இந்த நிலையில், உத்தரக்காண்ட் மாநிலத்தில் உள்ள மலைக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சுயதொழில் செய்து, கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறார்.

ஹல்த்வானி அருகே உள்ள கர் கிராமத்தைச் சேர்ந்த அனில் பட் என்பவர், மாநில அரசின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தனது தரிசு நிலத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளார். 300 கிலோவாட் உற்பத்தி திறன் கொண்ட இந்த சோலார் மின் உற்பத்தி நிலையம் மூலம் மின் உற்பத்தி செய்து, அதனை அரசுக்கு விற்பனை செய்கிறார்.

இதன் மூலம் மாதம்தோறும் ஒன்றரை லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறார். அதோடு அப்பகுதி இளைஞர்களுக்கு வேலையும் வழங்கி வருகிறார்.

இதுகுறித்து அனில் பட் கூறுகையில், "எனது நிலம் வனப்பகுதிகளுக்கு அருகில் இருப்பதால், பயிரிடும்போது வன விலங்குகள் சேதப்படுத்தி வந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் பயிடுவதை நிறுத்திவிட்டு, சோலார் மின் உற்பத்தி தொழிலை தொடங்கினேன்.

தொழில் தொடங்க 'உத்தரகாண்ட் மாநில புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (UREDA)' மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் உதவியுடன் வங்கிக் கடன் பெற்றேன், அதில் 30 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது. இப்போது தன்னிறைவோடு தொழில் செய்து வருகிறேன்" என்றார்.

இதையும் படிங்க:இறுதிகட்டப்பணியில் உலகின் மிக உயரமான செனாப் நதி பாலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.