ETV Bharat / bharat

பாஜகவில் இணைந்தார் அனில் ஆண்டனி: தவறான முடிவை எடுத்துவிட்டதாக தந்தை ஏ.கே.ஆண்டனி வேதனை! - பாஜகவில் அனில் ஆண்டனி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் இணைந்தார். பிரதமர் மோடியிடம் தெளிவான தொலைநோக்குப் பார்வை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Anil antony
அனில் ஆண்டனி
author img

By

Published : Apr 6, 2023, 8:04 PM IST

புதுடெல்லி: கேரள மாநில காங்கிரஸின் சோஷியல் மீடியா ஒருங்கிணைப்பாளராக இருந்தவர், அனில் ஆண்டனி. முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் ஆவார். குஜராத் கலவரம் தொடர்பாக, பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸில் இருந்து அனில் ஆண்டனி விலகினார்.

பிபிசி-யின் ஆவணப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த அனில் ஆண்டனி, இந்திய நிறுவனங்கள் மீது பிரிட்டிஷ் ஊடகம் வைக்கும் கருத்து, நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் எனக் குறிப்பிட்டார். மேலும் இந்த கருத்துகளைத் தெரிவித்த பின், தனக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்ததாகவும் அனில் ஆண்டனி கூறினார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று (ஏப்ரல் 6) மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் முரளிதரனை சந்தித்த அனில் ஆண்டனி பாஜகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், கட்சியின் நிர்வாகிகள் தருண் சவுக், அனில் பாலுனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • I have resigned from my roles in @incindia @INCKerala.Intolerant calls to retract a tweet,by those fighting for free speech.I refused. @facebook wall of hate/abuses by ones supporting a trek to promote love! Hypocrisy thy name is! Life goes on. Redacted resignation letter below. pic.twitter.com/0i8QpNIoXW

    — Anil K Antony (@anilkantony) January 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனில் ஆண்டனி, "ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு உழைப்பது தான் நமது கடமை என காங்கிரஸ் தலைவர்கள் எண்ணுகின்றனர். ஆனால், நான் நாட்டு மக்களுக்காக உழைக்க விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியிடம் தெளிவான தொலைநோக்கு பார்வை உள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது" என்றார்.

இதற்கிடையே, தனது மகன் பாஜகவில் இணைந்தது தவறான முடிவு என அனில் ஆண்டனியின் தந்தை ஏ.கே.ஆண்டனி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது மகனின் முடிவு எனக்கு பெரும் வலியைத் தருகிறது. மதநல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது, இந்தியா. 2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான ஆட்சி வந்த பிறகு, நாட்டில் மதச்சார்பின்மை நீர்த்துப் போய்விட்டது.

என் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் தவறான கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பேன். பாஜக, அரசியல் சாசனத்தின் மதிப்பை அழிக்கின்றது. நான் காங்கிரஸ் தொண்டனாகவே மரணிக்க விரும்புகிறேன்" என்றார்.

2017ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த அனில் ஆண்டனி, 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கேரள மாநில காங்கிரஸின் டிஜிட்டல் மீடியா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் சிகிச்சை பெற்ற ஜார்கண்ட் கல்வி அமைச்சர் மறைவு - அமைச்சர் மா.சு நேரில் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.