புதுச்சேரி: மணவெளி தொகுதிக்குட்பட்ட கலைஞர் நகரில், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
இதனைக்கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார். இதற்கான கல்வெட்டும் அந்த கட்டடத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த ஏழு மாதங்களாக பூட்டியே கிடந்த அங்கன்வாடி மையத்தை சுத்தம் செய்து, நேற்று (ஜூலை. 31) சபாநாயகர் செல்வம் மீண்டும் திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்தக் கட்டடத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் காகிதங்களையும் ஒட்டி மறைத்துவிட்டு, மீண்டும் புதிதாக கட்டியது போல் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அசாம் முதலமைச்சருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற தயார் - மிசோரம் அரசு