ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் வெங்கடாசலம் ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (டிச.5) ரயில் பாதையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் வேகமாக வந்த ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக ரயிலில் பயணித்தவர்கள் நெல்லூர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து காவல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில்,”உயிரிழந்த நபர் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. ரயிலில் மோதியதில் அவருடைய ஒரு கை துண்டிக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து அடையாள அட்டை, செல்போன் போன்ற எந்தப் பொருள்களும் கிடைக்கவில்லை”என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.