கர்நாடாக மாநிலம் சித்தாபூர் அருகே உள்ள அவெரகுண்டா காட்டில் காபி தோட்டத்திற்குள் உணவு தேடி வந்த யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது. இது குறித்து காபி தோட்டத்தின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி வாகனம் மூலம் யானை பத்திரமாக மீட்கப்பட்டது. உடனே வெகுண்டு எழுந்த யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார். அதில், யானையின் நிலை தான் தற்போது இந்தியாவுக்கும், கரோனா குழியில் விழுந்துள்ளோம். ஒருவருக்கொருவர் உதவுவோம். மீண்டு எழுவோம் என்று ஒப்பிட்டு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'வீடு திரும்பினார் விஜயகாந்த்' - பிரேமலதா போட்ட கண்டிஷன்