ETV Bharat / bharat

உலகளாவிய தெற்கின் குரலை ஜி20 மாநாடு பிரதிபலிக்கும் - அமிதாப் காந்த்

Amitabh Kant about G20 summit: உலகளாவிய தெற்கின் குரலை ஜி20 மாநாடு பிரதிபலிக்கும் என ஜி20 அமைப்பின் இந்தியக் குழு தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Sep 8, 2023, 4:46 PM IST

டெல்லி: நாளை (செப் 9) மற்றும் நாளை மறுநாள் (செப் 10) டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்தியா தலைமை தாங்கும் இந்த மாநாட்டிற்காக டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வந்தடைந்து கொண்டு இருக்கின்றனர்.

  • #WATCH | G 20 in India | On Chinese President Xi Jinping not attending the G20 Summit in Delhi, G 20 Sherpa Amitabh Kant says, "China is a multilateral player. In multilateral discussions, the issues are very different from bilateral issues and the Chinese discuss issues of… pic.twitter.com/EPVUosLeCY

    — ANI (@ANI) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில், இன்று (செப் 8) ஜி20 அமைப்பின் இந்தியக் குழு தலைவரும், நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான அமிதாப் காந்த் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமிதாப் காந்த், “ஜி20 மாநாட்டின் முடிவில் உலகளாவிய தெற்கின் குரல் பிரதிபலிக்கும் என டெல்லி தலைவர்கள் முடிவெடுத்து உள்ளனர்.

பசுமை வளர்ச்சி, காலநிலை நடவடிக்கை, காலநிலை நிதி ஆகியவை இந்தியாவின் முன்னுரிமைகளில் உள்ளது. இந்தியாவின் பிரசிடென்சி என்பது உள்ளடக்கியதாகவும், தீர்க்கமானதாகவும், இலக்கு உள்ளதாகவும் மற்றும் செயல்பாடு சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

நாங்கள் எங்களது பிரசிடென்சியை வசுதெய்வ குடும்பகம் என்ற உலகம் ஒரே குடும்பம் என்பதன் அடிப்படையில் உள்ளதாக இந்தியா உணர்கிறது. நிலையான வளர்ச்சி இலக்குகள்தான் (SDG) எங்களது இரண்டாவது முன்னுரிமையாக இருக்கும். ஏனென்றால், 169 நிலையான வளர்ச்சி இலக்குகளில் 12 மட்டும்தான் உள்ளது.

நாம் இப்போது 2030-இன் இடைப்பட்ட செயல்பாட்டுப் புள்ளியில் இருக்கிறோம். ஆகையால், நிலையான வளர்ச்சி இலக்குகளை அதிகரிக்க வேண்டும், வெளிப்பாடுகளை கற்றுக் கொள்வதை அதிகரிக்க வேண்டும், சுகாதார வெளிப்பாடு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், 21ஆம் நூற்றாண்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டு பலதரப்பட்ட நிறுவனங்களில் கவனம் செலுத்த வேண்டும். காலநிலை நடவடிக்கை மற்றும் காலநிலை நிதி ஆகியவற்றை உள்ளடக்கிய பசுமை வளர்ச்சியை முன்னிலை ஆக்குவதை இந்தியா விரும்புகிறது.

எனவே, காலநிலை நடவடிக்கை, காலநிலை நிதி மற்றும் பசுமை வளர்ச்சி ஆகியவை நமது மூன்றாவது முன்னுரிமை. ஏனென்றால், நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் காலநிலை செயல்பாடு ஆகியவற்றிற்கு நிதி தேவைப்படுகிறது” என தெரிவித்தார். அதேபோல் நிதி அமைச்சகத்தின் பொருளாதரத்துறை செயலாளர் அஜய் சேத், மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உலகளாவிய பிரச்னைகளுக்கு இந்தியா தலைமை தாங்கும் இந்த ஜி20 மாநாடு கவனம் செலுத்தும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: G20 Summit: 15க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் உடன் பிரதமர் சந்திப்பு - உலக அளவில் வலுவடையும் இந்தியாவின் உறவுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.