ETV Bharat / bharat

இரண்டாவது நாளாக மேற்கு வங்கத்தில் பரப்புரை மேற்கொள்ளும் அமித் ஷா! - சட்டப்பேரவை தேர்தல்

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் (டிச. 20) உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா இரண்டாவது நாளாக இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

மேற்கு வங்கத்தில் இன்றும் பரப்புரை மேற்க்கொள்ளும் அமித் ஷா!

author img

By

Published : Dec 20, 2020, 11:34 AM IST

அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பாஜக பெரும் முனைப்பு காட்டி வருகிறது. இதையொட்டி பாஜக தலைவர்களும் மேற்கு வங்கத்தில் தங்கள் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.

மத்திய அரசுக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவிவரும் சூழலில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் முன்னதாகத் தாக்கப்பட்டது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக நேற்று (டிச.19) மேற்கு வங்கம் சென்றடைந்தார்.

நேற்று (டிச.19) பல இடங்களில் பரப்புரை மேற்க்கொண்ட அவர், இன்று (டிச.20) சாந்தினிகேத்தனில் உள்ள விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். பின்னர், ரவீந்திரா பவனில் உள்ள ரவீந்திரநாத் தாகூருக்கு மரியாதை செய்கிறார்.

தொடர்ந்து, போல்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பேரணி மற்றும் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

இதையும் படிங்க...டிச.23 முதல் மு.க.ஸ்டாலின் பரப்புரை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.