ETV Bharat / bharat

அமித் ஷா காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்! - அமித் ஷா காஷ்மீர் பயணம்

அமித் ஷாவின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Amit Shah
Amit Shah
author img

By

Published : May 8, 2022, 2:37 PM IST

ஸ்ரீநகர்: உள்துறை அமைச்சர் அமித் ஷா மே8ஆம் தேதி (அதாவது இன்று) ஜம்மு காஷ்மீரில் ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மற்றும் பாகிஸ்தானில் (மேற்கு) இருந்து காஷ்மீர் வந்த அகதிகளுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருந்தார்.

இந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் பாகிஸ்தானில் இருந்து 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் பயங்கரவாதிகள் பயன்படுத்திய சுரங்கப் பாதையும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்ட பின்னர் உள்துறை அமைச்சர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இதனால் இந்தப் பயணம் பல்வேறு தரப்பினாலும் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், தனிப்பட்ட பொறுப்புகள் காரணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு பயணத்தை ரத்து செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் இந்தியா வந்துள்ள இந்த அகதிகள் சுமார் 3 ஆயிரம் பேர் இருப்பார்கள். இவர்களுக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர்களுடன்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மேற்கு வங்காளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா? அமித் ஷா பதில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.