ETV Bharat / bharat

Omicron Scare: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்தியக் குழு

author img

By

Published : Dec 25, 2021, 6:24 PM IST

நாட்டில் ஒமைக்ரான் தொற்று அதிகமாக உள்ள பத்து மாநிலங்களுக்கு மத்தியக் குழுவை அனுப்பி ஆய்வு நடத்த சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Amid Omicron scare
Amid Omicron scare

டெல்லி: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான், இரண்டு வாரங்களில் 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. குறிப்பாக இந்தியாவில் கடந்த வாரம் 30 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் 415 பேருக்கு உறுதியாகி உள்ளது.

இதனால் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதனடிப்படையில் மத்திய அரசு, ஒமைக்ரான் தொற்று அதிகமாக உள்ள கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப், மிசோரம், தமிழ்நாடு ஆகிய 10 மாநிலங்களில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக பல்வேறு துறை அலுவலர்கள் அடங்கி குழுக்கள் மாநிலங்களுக்கு சென்று ஆய்வுகள் நடத்த உள்ளன. இந்த ஆய்வுகளின் முடிவில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல், கரோனா தடுப்பு விகித்தத்தை அதிகரித்தல், கட்டுப்பாடுகள் விதித்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் அடுத்த 2 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு ஒமைக்ரான்; நிபுணர் குழு எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.