ETV Bharat / bharat

கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களை குறிவைக்கும் பாஜக... மூத்த தலைவர்கள் முக்கிய ஆலோசனை!

author img

By

Published : Jul 6, 2023, 3:44 PM IST

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 142 தொகுதிகளை முழுவதுமாக கைப்பற்றுவது தொடர்பாக 12 மாநிலங்களைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஆலோசனை நடத்தினர்.

BJP
BJP

கவுகாத்தி : 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 142 மக்களவை தொகுதிகளை முழுமையாக கைப்பற்றுவது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடைபெற்றது.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் மத்திய அமைச்சர் சர்பானந்த சோன்வால், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, திரிபுரா முதலமைச்சர் மணிக் ஷா, மற்றும் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், முத்த தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் உள்ள 142 மக்களவை தொகுதிகளை முற்றிலும் கைப்பற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் யுக்திகள் மற்றும் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூட்டத்தை தொடர்ந்து பேசிய அசாம் மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிடா, "தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வருவதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு என்றும் அதை நோக்கி செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தில் அனைத்து கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கட்சித் தலைமையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் உள்ள 8 வடகிழக்கு மாநிலங்களில் 25 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில் அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் தான் 14 இடங்கள் உள்ளன. அசாம் மாநிலத்தை தொடர்ந்து அருணாசல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 2 மக்களவை தொகுதிகள் உள்ளன.

மிசோரம், சிக்கிம், நாகாலந்து ஆகிய மாநிலங்களில் தலா 1 மக்களவை தொகுதி உள்ளது. கிழக்கு மாநிலங்களை எடுத்துக் கொண்டால் மேற்கு வங்கத்தில் 42 மக்களவை இடங்களும், பீகாரில் 40 இடங்கள், ஒடிசாவில் 21 இடங்கள் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 14 மக்களவை தொகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மிசோரம் சட்டசபை தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வடக்கு, மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களின் பாஜக தலைவர்கள் ஜூலை 7ஆம் தேதி டெல்லியிலும், தென் மாநிலங்களின் பாஜக தலைவர்கள் ஜூலை 8ஆம் தேதி ஐதராபாத்திலும் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பழங்குடி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: பாதிக்கப்பட்டவரின் கால்களைக் கழுவி கவுரவித்த ம.பி. முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.