பாலி: அதிகரித்துவரும் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாலி, ஜலாவார், சுமர்பூர் ஆகிய பகுதிகளில் இறந்து விழுந்த காக்கைகளின் உடல்கள் போபாலில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு கிருமி பரவாமல் தடுக்கும் நோக்கத்தில், நேற்றிரவே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் பாலி மாவட்ட ஆட்சியர் அன்ஷ்தீப். மேலும், காக்கைகள் இறந்து விழுந்த பகுதிகளுக்கு யாரையும் அனுமதிக்க வேண்டாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் முதல் காக்கை உள்ளிட்ட பறவைகள் காரணமின்றி உயிரிழந்து வருகின்றன. மூன்று நாட்களில் பாலி மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட காக்கைகள் உயிரிழந்துள்ளன.