பாட்னா (பிகார்): கடந்த 2019ஆம் ஆண்டு பிகார் மாநிலம் பாட்னா டானாபூரில் மூன்று வயது குழந்தை ஒன்று தெருவில் ஆதரவின்றி இருந்துள்ளது. பின்னர் குழந்தையை மீட்ட விக்ரம் காவல் துறையினர், குழந்தையின் பெற்றோரை தேடி வந்தனர்.
ஆனால் குழந்தையின் பெற்றோர் குறித்த தகவல்கள் கிடைக்காததால், குழந்தையை தனியார் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் மருத்துவர் கார்லின் ராய் மில்லர் - கேத்ரின் சுசீலிவன் மில்லர் தம்பதி, இந்த குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து டானாப்பூர் உட்கோட்ட அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட டானாப்பூர் துணைப்பிரிவு அலுவலர் பிரதீப் சிங், அமெரிக்க தம்பதியின் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிகழ்வின்போது பாட்னா குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு உதவி இயக்குநர் உதய் குமார் உடன் இருந்தார்.
இதையும் படிங்க: தெருநாய்களால் துண்டாக்கப்பட்ட குழந்தையின் உடல்