குருகிராம் (ஹரியானா): கரோனா பாதிக்கப்பட்ட நோயாளியிடம் இருந்து அவசர ஊர்தி ஓட்டுநர் ரூ.1,20,000 வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குருகிராமிலிருந்து லுதியானாவிற்கு அழைத்து சென்றதற்கு இந்தக் கட்டணத்தை அவர் பெற்றுள்ளார். சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கட்டண வசூல் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுபோல் யாரேனும் கட்டண கொள்ளையில் ஈடுபட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.