ETV Bharat / bharat

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்! - அமர்நாத் யாத்திரை 2022

கடும் மழை காரணமாக தற்காலிமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.

அமர்நாத் யாத்திரை
அமர்நாத் யாத்திரை
author img

By

Published : Jul 11, 2022, 8:11 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். கரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் யாத்திரை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு யாத்திரை கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு அருகே கடந்த வெள்ளிகிழமை ஜூலை 8ஆம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் குகைக் கோயிலுக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் இன்று(ஜூலை 11) மீண்டும் யாத்திரை தொடக்கப்பட்டது. பஹல்காம் நுன்வான் முகாமில் இருந்து பக்தர்கள் குழு புறப்பட்டு சென்றனர். அமர்நாத்தில் மேகவெடிப்பு, கனமழை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: அமர்நாத் மேக வெடிப்பு: நிலச்சரிவு ஆபத்திலிருந்து தப்பிய 25 பேர் சென்னை வருகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.