ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்பிற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முக்கிய நகாரான விஜயவாடாவில் மாநகராட்சி அமைப்பிற்கான தேர்தல் வரும் 10ஆம் தேதி (மார்ச் 10) நடைபெறவுள்ளது. அதற்கான பரப்புரையில் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தேர்தல் பரப்புரையில் அமராவதி தலைநகர் விவகாரத்தை தீவிரமாக கையிலெடுத்துள்ளார், சந்திரபாபு நாயுடு. அமராவதி கனவுத்திட்டம் எனக்கானது அல்ல. ஆந்திரப் பிரதேசத்தின் மக்களுக்கானது. அமராவதி என்பது அவர்களின் உரிமை. ஆந்திர மக்கள் எக்காரணம் கொண்டும் தங்களின் அமராவதி உரிமையை விட்டுத்தரக்கூடாது என்றார்.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி தோல்வியடைந்து, ஜெகன்மோகன் ஆட்சியமைத்தபின் அங்கு அமராவதி தலைநகர் திட்டம் முடக்கப்படுவதாக சந்திரபாபு நாயுடு தொடர் குற்றச்சாட்டை முன்வைத்துவருகிறார்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயிலுக்கு குவியும் நிதி!