ETV Bharat / bharat

அமர் ஜவான் ஜோதி இடம்மாற்றம் - கிளம்பியிருக்கும் புது விவாதம்

அமர் ஜவான் ஜோதியை இடமாற்றம் மேற்கொள்ளும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் நிலையில் இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

author img

By

Published : Jan 21, 2022, 10:56 AM IST

Amar Jawan Jyoti
Amar Jawan Jyoti

1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் வீர மரணமடைந்த வீரர்களின் நினைவைப் போற்றும் விதமாக தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் 1972ஆம் ஆண்டு அணையா விளக்கான அமர் ஜவான் ஜோதி உருவாக்கப்பட்டது.

இந்த அமர் ஜவான் ஜோதி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை அடுத்து, தற்போது இந்தியா கேட் பகுதியில் உள்ள இந்த விளக்கை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் இணைக்கப்படவுள்ளது.

இரு விளக்குகளையும் இணைக்கும் நிகழ்வை ஏர் மார்ஷல் பலபத்ரா ராதாகிருஷ்ணா மேற்கொள்ளவுள்ளார். இந்த இடமாற்ற நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "வீரர்களின் தியாகத்தை குறிக்கும் அமர் ஜவான் ஜோதியை அணைக்கும் இந்த செயல் மிகுந்த துயரத்தை தருகிறது. தேச பக்தி இல்லாதவர்கள் இதைப் பற்றி கவலைப்பட மாட்டர்கள். மீண்டும் வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக அமர் ஜவான் ஜோதி ஏற்றப்படும்." எனக் கூறியுள்ளார்.

ராணுவ வீரர்களின் ஜோதி அணைக்கப்படவில்லை. மாறாக தேசிய போர் நினைவு சின்னத்தில் அதை முறையாக இணைக்கத்தான் உள்ளோம் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மம்முட்டியைத் தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு கரோனா பாசிட்டிவ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.