ETV Bharat / bharat

ஆல்ட் நியூஸ் நிறுவன இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது - சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முகமது ஜுபைர் கைது
முகமது ஜுபைர் கைது
author img

By

Published : Jun 29, 2022, 7:39 AM IST

Updated : Jun 29, 2022, 8:44 AM IST

டெல்லி: போலி செய்திகளை கண்டறிந்து, அவற்றை அம்பலப்படுத்தும் "ஆல்ட் நியூஸ்" நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் நேற்று முன்தினம் (ஜூன் 27) கைது செய்யப்பட்டார். 2018-ல் முகமது ஜுபைர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி பதிவு செய்யப்பட்ட வழக்கில், டெல்லி போலீசார் ஜுபைரை கைது செய்தனர்.

செய்தி ஒன்றின் உண்மைத் தன்மையை ஆல்ட் நியூஸ் நிறுவனம் அம்பலப்படுத்தியதற்காகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதற்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்க உறுப்பினர் கவிதா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "பாஜகவை விமர்சிப்பவர்களை பிரதமர் மோடி பழிவாங்குகிறார். அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறார்.

பிரதமர் மோடி சர்வதேச அரங்கில் பேசும்போது, இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை எப்படி நடத்துகிறார் என்பது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்டவை குறித்து சர்வதேச ஊடகங்கள் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டும்" என்று கூறினார்.

சமூக ஆர்வலரும் அன்ஹாத் நிறுவனருமான ஷப்னம் ஹஷ்மி பேசும்போது, "இது அவசரநிலையை விட மோசமான காலம். சர்வதேச அரங்கில் பிரதமர் சுதந்திரம் பற்றி பேசுகிறார், இது முற்றிலும் பாசாங்குத்தனம்" என்று கூறினார்.

பத்திரிகையாளரும் அம்னெஸ்டி இந்தியா நிறுவனத்தின் தலைவருமான ஆகார் படேல் கூறுகையில், " போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் முக்கியமான வேலை செய்வதற்காகவே ஜுபைர் கைது செய்யப்பட்டுள்ளார். முகமது ஜுபைரின் கைது, இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் உச்சம் அடைந்திருப்பதையே காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Video; மோடியைத் தேடி ஓடி வந்த அமெரிக்க அதிபர் பைடன்

Last Updated : Jun 29, 2022, 8:44 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.