ETV Bharat / bharat

டெலிபோன்கள் ஒட்டுக்கேட்பு, ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டேன்- அசோக் கெலாட்!

ராஜஸ்தானில் எதிர்க்கட்சி தலைவர்களின் டெலிபோன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் என் நிலைப்பாட்டை ஏற்கனவே நான் தெளிவுப்படுத்தியுள்ளேன் என்று அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

author img

By

Published : Mar 17, 2021, 11:52 AM IST

Already cleared my stand on phone tapping Phone tapping Rajasthan phone tapping டெலிபோன்கள் ஒட்டுக்கேட்பு அசோக் கெலாட் ராஜஸ்தான்

ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): தொலைபேசி ஒட்டுக்கேட்பு பிரச்சினை தொடர்பாக ராஜஸ்தான் மாநில சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்திய பின்னர், முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் ஒரு பேஸ்புக் பதிவின் மூலம் 2020 ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தியதாக தெரிவித்தார்.

முன்னதாக, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான பாஜக, இவ்விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியது. பின்னர் சட்டப்பேரவையில் இவ்விவகாரம் தொடர்பாக இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை கொண்டுவந்தது.

இதனை சபாநாயகர் சிபி ஜோஷி நிராகரித்தார். சட்டப்பேரவையின் பூஜ்ய நேரத்தின்போது எதிர்க்கட்சி துணை தலைவர் ராஜேந்திர ரதோட் மற்றும் பாஜக எம்எல்ஏ கலிசரண் சரஃப் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானங்களை கொண்டுவந்தனர்.

அப்போது அவர்கள் அரசாங்கம் யாருடைய பதிவையெல்லாம் ஒட்டுக்கேட்டது என்று வெளிப்படையாக கூறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சலசலப்புகள் அவையில் தொடர்ந்ததால் அவை நடவடிக்கை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக பதிலளித்துள்ள மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், இந்த விவகாரத்தில் ஏற்கனவே தாம் தெளிவான பதிலை அளித்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த வாட்ஸ்அப் உரையாடல் கசிந்ததா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.