ETV Bharat / bharat

கிளப்ஹவுசில் காஷ்மீர் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய திக்விஜய சிங்

author img

By

Published : Jun 12, 2021, 3:51 PM IST

சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து கிளப்ஹவுஸ் சமூக வலைதளத்தில் திக்விஜய சிங் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திக்விஜய சிங்
திக்விஜய சிங்

கிளப்ஹவுஸ் என்ற புதிய சமூக வலைதளச் செயலி அன்மைக்காலமாக பலராலும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிளப்ஹவுஸ் விவாத நிகழ்வு ஒன்றில் பங்கேற்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சட்டப்பிரிவு 370 சர்ச்சையில் திக்விஜய சிங்

இந்த கிளப்ஹவுஸ் விவாதத்தில் பாகிஸ்தான் ஊடகவியாளர் ஒருவர் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்தை பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த திக்விஜய சிங், சட்டப்பிரிவு 370ஐ நீக்கியவிதம் மதசார்பின்மையின் அடிப்படையை மீறி நடத்திய நடவடிக்கை. இது மிகவும் வருந்தத்தக்க அம்சமாகும்.

கிளப்ஹவுஸ் விவாதத்தில் திக் விஜய் சிங்
கிளப்ஹவுஸ் விவாதத்தில் திக் விஜய் சிங்

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றால் இது குறித்து நிச்சயம் மறு பரிசீலனை செய்யும் என பதிலளித்துள்ளார். திக்விஜய சிங்கின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் லீக் ஆகி தற்போது பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகிறது.

பாஜகவின் கண்டனம்

பாஜக, ஐ.டி. விங் தலைவரான அமித் மாளவியா இந்தப் பேச்சை பகிர்ந்து, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டுவருவோம் என பாகிஸ்தான் ஊடகவியலாளரிடம் சொல்கிறது. பாகிஸ்தான் விருப்பத்தை காங்கிரஸ் நிறைவேற்ற விரும்புகிறதா என கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிளப்ஹவுஸ் விவாதத்தில் திக் விஜய் சிங்
கிளப்ஹவுஸ் விவாதத்தில் திக் விஜய் சிங்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370, ஒன்றிய பாஜக அரசால் 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

இதையும் படிங்க: புலிட்சர் விருது பெறுகிறார் தமிழச்சி மேகா ராஜகோபாலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.