கொச்சி: இந்துக்களை மதம் மாற்ற வந்துள்ளனர் என்று கூறி உத்தரப் பிரதேசத்தில் கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் உத்தரப் பிரதேசம் வழியாக ரயில் பயணத்தின்போது கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் "தாக்கப்பட்டனர்" என்ற குற்றச்சாட்டை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை (மார்ச் 29) நிராகரித்தார், மேலும் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் "தவறான அறிக்கைகளை" வெளியிட்டார் என்றும் கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “எந்த கன்னியாஸ்திரி மீதும் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை, மாநில முதல்வர் (கேரளா) முற்றிலும் பொய் சொல்கிறார், அதற்காக அவர் தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார்” என்றார்.
மார்ச் 19ஆம் தேதி ஜான்சி ரயில் நிலையத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம், கடந்த வாரம் கேரளாவின் தேர்தல் பரப்புரையில் எதிரொலித்தது. இது தொடர்பாக பியூஷ் கோயல் மேலும் கூறுகையில், “அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக கன்னியாஸ்திரிகளுக்கு எதிராக சிலர் புகார் அளித்தனர். இந்தப் புகார் சரியானதா அல்லது தவறா என்பதைக் கண்டுபிடிப்பது காவல்துறையின் கடமையாகும். காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டனர்” என்றார்.
இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரஸின் கடைசி ஆயுதம் வன்முறை!