ETV Bharat / bharat

மிக நீளமான வான்வெளிப் பாதையில் பறக்க இருக்கும் பெண் விமானிகள்! - மிக நீளமான வான்வெளிப் பாதையில் பறக்க இருக்கும் பெண் விமானிகள்

டெல்லி: அமெரிக்காவின் நகரமான சான் பிரான்சிஸ்கோ -பெங்களூரு இடையேயான ஏர் இந்தியாவின் இடைநிறுத்தம் இல்லாத விமானத்தை முழுக்க முழுக்க பெண் விமானிகள் இன்று (ஜன. 9) இயக்குவார்கள் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

All-women cockpit crew to fly inaugural San Francisco-Bengaluru flight: Puri

author img

By

Published : Jan 9, 2021, 2:30 PM IST

ஏர் இந்தியா நிறுவனம் பெங்களூரு – சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஹைதராபாத் – சிகாகோ இடையே வாரம் இரண்டு முறை நேரடி விமானங்களை இயக்க உள்ளது. அதன்படி, மிக நீளமான வான்வெளித் தூரம் கொண்ட பெங்களூரு - சான்பிரான்சிஸ்கோ இடையேயான நேரடி விமானத்தை இயக்க மிகவும் அனுபவம் வாய்ந்த நான்கு பெண் விமானிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு- சான் பிரான்சிஸ்கோ இடையேயான பயண தூரம் 14ஆயிரம் கி.மீ.க்கு அதிகமாகும். இது டெல்லி-சான்பிரான்சிஸ்கோ இடையேயான பயண தூரத்தை விட ஆயிரம் கி.மீ அதிகம். டெல்லியிலிருந்து செல்லும் விமானம் பசிபிக் கடல் பகுதி வழியாக செல்லும். பெங்களூருவில் இருந்து செல்லும் விமானம் அட்லாண்டிக் கடல் வழியாக செல்லவுள்ளது.

இது குறித்து ட்வீட் செய்துள்ள விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர், கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பெங்களூரு - சான் பிரான்சிஸ்கோ இடையேயான வரலாற்று தொடக்க விமானத்தை இயக்குவார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த விமான சேவை இன்று (ஜன. 9) இரவு 08:30 மணிக்கு பெங்களூருலிருந்து புறப்பட்டு நாளை மறுநாள் (ஜன. 11) அதிகாலை 3.45 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...'நாடு முழுக்க, 'லவ் ஜிகாத்' சட்டத்தை அமல்படுத்த வேண்டும்'- பிரக்யா சிங் தாக்கூர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.