ETV Bharat / bharat

புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - union workers protest

பொதுச்சொத்துகள் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

d[o-
p
author img

By

Published : Aug 9, 2021, 11:03 PM IST

புதுச்சேரி: பொதுச்சொத்துகள் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து புகழ்மிக்க 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கிய நாளான இன்று(ஆக.9) ஆம் தேதி "இந்தியாவைப் பாதுகாப்போம்" என்ற முழக்கத்துடன் போராடுமாறு, மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன.

அதனடிப்படையில் புதுச்சேரியில் AITUC, INTUC, AICCTU, LLF, MLF, AIUTUC ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டாக ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தின.

முக்கியமாக, தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்டத் தொகுப்புகளையும், மக்கள் விரோத வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும், வேலை இழப்பினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்வு காண வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

பல்வேறு கோரிக்கைகள்

பணியாளர் உள்ளிட்ட 'திட்ட ஊழியர்'களுக்கு தொழிலாளர் எனும் தகுதியை வழங்க வேண்டும். அவர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் சேதுசெல்வம், ஞானசேகரன், புருஷோத்தமன், செந்தில், சிவகுமார் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த போராட்டங்கள் மிஷன் வீதி வஉசி அரசு பள்ளி, சேதராப்பட்டு, ராஜீவ்காந்தி சதுக்கம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது.

இதையும் படிங்க்: ஆம்பூரில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.