ETV Bharat / bharat

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எங்கு நடைபெற உள்ளது? - மத்திய அமைச்சர் பதில்! - ஈடிவி தமிழ்நாடு

All party meeting begins ahead of Special session of Parliament: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நாளை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இன்று (செப்.17) நடைபெற்றது.

All-party meeting begins ahead of Special session of Parliament
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முன்பாக, அனைத்து கட்சி கூட்டம் இன்று தொடங்கியது
author img

By ANI

Published : Sep 17, 2023, 8:09 PM IST

Updated : Sep 17, 2023, 9:10 PM IST

டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நாளை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சிறப்புக் கூட்டத் தொடருக்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் இன்று (செப்.17) நடைபெற்றது.

தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட எதிர்கட்சிகளைச் சேர்ந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுத் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, தமிழ்நாட்டில் இருந்து வைகோ, திருச்சி என்.சிவா, கனிமொழி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் வி.சிவதாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வு பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும். அதற்கு மறுநாள் (செப் 19) பழைய நாடாளுமன்ற வளாகத்தில் புகைப்பட நிரல் உள்ளது. அதன் பிறகு அன்று காலை 11 மணியளவில் மத்திய ஹாலில் வைத்து நிகழ்ச்சி நடைபெறும்.

  • #WATCH | Delhi: Union Parliamentary Affairs Minister Pralhad Joshi says, "On the first day, the session will be held in the Old Parliament House... Next day i.e. on 19th September, there will be a photo session in the Old Parliament, then at 11 am there will be a function in the… pic.twitter.com/xwzJ6gRxN7

    — ANI (@ANI) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனையடுத்து, புதிய நாடாளுமன்றத்திற்குச் செல்வோம். எனவே, நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் செப்டம்பர் 19 முதல் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறத் தொடங்கும். பின்னர், செப்டம்பர் 20 முதல் அரசின் வழக்கமான வேலைகள் அனைத்தும் புதிய நாடாளுமன்றத்திலே செயல்படத் துவங்கும்” எனத் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை (செப்.13) மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்ற ஐந்து நாட்கள் சிறப்பு கூட்டத் தொடர் முன்பு செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொருக்கு முன்பு, செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தனது "X" பக்கத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிவிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: 'பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக மின்னஞ்சல் (Email) மூலமாக அனைத்து தலைவர்களுக்கும் அனுப்பபட்டுள்ளது. மேலும் கடிதம் மூலமாக அனுப்பபட்டதாக தெரிவிக்கப்பட்டன. மேலும், கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. சிறப்புக் கூட்டத்தில் 75 ஆண்டுகள் நாடாளுமன்றத்தின் பயணங்கள் மற்றும் சம்விதான் சபையில் நடைபெற்ற 1946 டிசம்பர் 9ஆம் தேதி முதல் நாடாளுமன்ற கூட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்றம் சார்ப்பில் வெளியிட்ட குறிப்பில், 75 ஆண்டுகளாக சம்விதான் சபையில் நாடாளுமன்றப் பயணம் சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் ஆகியவை குறித்து நாளை நடைபெற உள்ள முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறிவுள்ளது.

இன்று (செப்.17) துணை குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லாவும் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: PM Modi : பிரதமர் மோடி பிறந்த நாள் விழா.. நாடு முழுவதும் பாஜக ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

Last Updated : Sep 17, 2023, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.