உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் மதுபானங்களை விற்பனை செய்ய உரிமம் பெற்றவரால் விற்கப்பட்ட போலி மதுபானங்களை குடித்தவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது; 'போலி மதுபானங்களை குடித்து உயிரிழந்தவர்கள் அனைவரும் லாரி ஓட்டுநர்கள் ஆவர். இவர்கள் அலிகார்-தபால் நெடுஞ்சாலையில் ஒரு எரிவாயு கிடங்கில் வேலைக்காக கூடியிருந்தனர்.
அந்த மதுக்கடையில் உள்ள மதுபானங்கள் அனைத்திலும் சோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பின்னர் கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தனர்.
தற்போது இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.