ETV Bharat / bharat

அம்மாவாக போகும் ஆலியா பட்- இன்ஸ்டாவில் ஹேப்பி போஸ்ட் - Alia Bhatt and Ranbir Kapoor announce pregnancy

சில மாதங்களுக்கு முன் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட ஆலியாபட் தற்போது அவர் கருவுற்றுதை இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அம்மாவாக போகும் ஆலியாபட்- இன்ஸ்டாவில் ஹேப்பி போஸ்ட்

author img

By

Published : Jun 27, 2022, 1:42 PM IST

கடந்த ஏப்ரலில் திருமணம் செய்து கொண்ட பாலிவுட் ஜோடியான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர், தங்களின் முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து பல பிரபலங்களும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனது ஹாலிவுட் அறிமுக படப்பிடிப்பிற்காக லண்டனில் இருக்கும் ஆலியா, அவரது இன்ஸ்டா பக்கத்தில் இரண்டு போட்டோக்களை ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். முதல் படத்தில், அல்ட்ராசவுண்ட் செய்யப்படும் போது ஆலியா படுக்கையில் படுத்திருப்பதைக் காணலாம், அவருடன் கணவன் ரன்பீர் படுக்கையில் அமர்ந்து மானிட்டரை பார்த்து கொண்டிருக்கிறார்.

இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியது. ஆலியாபட் அம்மாவாக போகும் செய்தி, அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலியாவின் உறவினர் ரித்திமா கபூர் சாஹ்னி பல இதய ஈமோஜிகளை ஆலியாவின் பதிவில் பதிவிட்டார். மேலும் இந்தி இயக்குநர் கரண் ஜோஹரும் அப்பதிவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:முதல் மாத திருமணம் முடிந்து ஆலியா மற்றும் ரன்பிர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.