தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் நேற்று(ஜூலை 25) இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஹைதராபாத்தில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தெலங்கானாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், அவசர தேவைகள் தவிர பிறவற்றிற்காக வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்