ETV Bharat / bharat

'கோவிட்-19 தடுப்பூசி குறித்து அவதூறு பேசிய அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும்' - கேசவ் பிரசாத் மெளரியா

author img

By

Published : Jan 2, 2021, 7:08 PM IST

லக்னோ : கோவிட்-19 தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பி நாட்டின் மருத்துவ அறிவியலாளர்களை அவமதித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டுமென உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மெளரியா வலியுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 தடுப்பூசி குறித்து அவதூறு பேசிய அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் - கேசவ் பிரசாத் மெளரியா

இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிக்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கவுள்ள நிலையில், தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் அதனை பொதுமக்களுக்கு எவ்வாறு அளிப்பது என நாடு முழுவதும் ஒத்திகை பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “நாடு முழுவதும் ஒத்திகை பார்க்கப்பட்டுவரும் கோவிட்-19 தடுப்பூசியை நாம் எவ்வாறு நம்புவது ? மக்களிடம் பாஜகவை திணிக்க தான் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. இது பாஜகவின் தடுப்பூசி. எனவே, நான் இந்த தடுப்பூசியைப் போட மாட்டேன். 2022ஆம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அனைவருக்கும் இந்த தடுப்பூசி விலையில்லாமல் கிடைக்கும்” என்றார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் இந்த கருத்திற்கு உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மெளரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பிய சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

இது குறித்து பேசிய துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மெளரியா, “அகிலேஷ் யாதவுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லை; உத்தரப் பிரதேச மக்களுக்கு அகிலேஷ் யாதவ் மீது நம்பிக்கை இல்லை. கோவிட் -19 தடுப்பூசிகளை 'பாஜகவின் தடுப்பூசி' என்று கூறி மக்களின் உயிரைக் காக்க போராடிய மருத்துவர்களையும், அறிவியலாளர்களையும் அவமதித்துள்ளார். அகிலேஷ் யாதவ் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.