லக்னோ (உத்தரப்பிரதேசம்): லக்னோவில் சுதந்திரப் போராட்ட வீரரும், சோசலிஸ்ட் தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நினைவாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வதேச மையம் (JPNIC-Jayaprakash Narayan International Centre) கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த அகிலேஷ் யாதவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
-
महान समाजवादी विचारक, सामाजिक न्याय के प्रबल प्रवक्ता लोकनायक जयप्रकाश नारायण जी की जयंती पर अब क्या सपा को माल्यार्पण करने से रोकने के लिए ये टिन की चद्दरें लगाकर JPNIC का रास्ता रोका जा रहा है।
— Akhilesh Yadav (@yadavakhilesh) October 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
सच ये है कि भाजपा लोकनायक जयप्रकाश जी के भ्रष्टाचार, बेकारी-बेरोज़गारी और महंगाई के… pic.twitter.com/wg8N4NdyLO
">महान समाजवादी विचारक, सामाजिक न्याय के प्रबल प्रवक्ता लोकनायक जयप्रकाश नारायण जी की जयंती पर अब क्या सपा को माल्यार्पण करने से रोकने के लिए ये टिन की चद्दरें लगाकर JPNIC का रास्ता रोका जा रहा है।
— Akhilesh Yadav (@yadavakhilesh) October 11, 2023
सच ये है कि भाजपा लोकनायक जयप्रकाश जी के भ्रष्टाचार, बेकारी-बेरोज़गारी और महंगाई के… pic.twitter.com/wg8N4NdyLOमहान समाजवादी विचारक, सामाजिक न्याय के प्रबल प्रवक्ता लोकनायक जयप्रकाश नारायण जी की जयंती पर अब क्या सपा को माल्यार्पण करने से रोकने के लिए ये टिन की चद्दरें लगाकर JPNIC का रास्ता रोका जा रहा है।
— Akhilesh Yadav (@yadavakhilesh) October 11, 2023
सच ये है कि भाजपा लोकनायक जयप्रकाश जी के भ्रष्टाचार, बेकारी-बेरोज़गारी और महंगाई के… pic.twitter.com/wg8N4NdyLO
இங்கு நிறுவப்பட்டுள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிலைக்கு, அவரது பிறந்தநாளில் சமாஜ்வாதி சார்பில் ஆண்டுதோறும் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாள் நேற்று (அக் 11) கொண்டாடப்பட்டது.
இதனை அடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஜெபிஎன்ஐசி மையத்தில் இருக்கக் கூடிய ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிலைக்கு சமாஜ்வாதி சார்பில் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவிக்கச் சென்றனர். அப்போது, ஜெபிஎன்ஐசி மையத்தில் பராமரிப்பு பணி நடப்பதாகக் கூறி, அகிலேஷ் யாதவ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் அந்த மையத்தைச் சுற்றி தகரத்தால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்ற, அந்த மையத்தின் வாயில் கதவை அகிலேஷ் யாதவ் ஏறி குதித்து உள்ளே சென்று, ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த சம்பவம் லக்னோ முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்து அகிலேஷ் யாதவ் தனது 'X' வலைத்தளப் பக்கத்தில், “ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிறந்த சோசலிச சிந்தனையாளர். அவர் சமூக நீதிக்காக பாடுபட்டவர் ஆவார். அவரது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதைத் தடுத்து பாஜகவினர் அலைக்கழிக்கின்றனர். அவருக்கு மரியாதை செலுத்துவதைத் தடுக்கவே பாஜகவினர் இதனைச் செய்துள்ளனர்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீட் பூஜ்ஜியம் கட்-ஆஃப் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!