2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முன்னணி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தேர்தலுக்கு முன்னதாக மாநிலம் தழுவிய பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். விஜய் யாத்திரை என்ற பெயரில் அக்டோபர் 12ஆம் தேதி முதல் இந்த பயணத்தை அவர் தொடங்குகிறார்.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர சௌத்திரி, " 2001ஆம் ஆண்டு கிராந்தி யாத்திரை, 2011ஆம் ஆண்டு தேர்தல் யாத்திரைக்குப் பின் சமாஜ்வாதி கட்சி மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. இம்முறையும் நாங்கள் ஆட்சிக்கு வருவது உறுதி.
இந்த விஜய் யாத்திரையின் நோக்கம் என்பது ஊழல் மிக்க, சர்வாதிகார, ஒடுக்குமுறை கொள்கைகளைக் கொண்ட பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பி, ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே ஆகும். உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இந்த யாத்திரை தொடங்கி, உன்னாவ்வில் முதல் கூட்டம் நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு