நாடு முழுவதும் செப்டம்பர் 17ஆம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என ஷிரோன்மணி அகாலிதளம் கட்சி தெரிவித்துள்ளது. கடந்தாண்டு அதே தினத்தில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர், விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் பெருந்திரளாக போராட்டம் நடைபெற்றுவருகிறது.
அத்துடன் பாஜகவுடன் 24 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த பஞ்சாப்பை சேர்ந்த ஷிரோன்மணி அகாலி தளம் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறியது. அக்கட்சி ஓராண்டுக்கும் மேலாக வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திவருகிறது.
இந்நிலையில், வேளாண் சட்டம் நிறைவேறி ஓராண்டு நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக, வரும் செப்டெம்பர் 17ஆம் தேதி நாடு முழுவதும் கறுப்பு தினமமாக அறிவிக்கப்படும் என ஷிரோன்மணி அகாலிதளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். மேலும் அன்று விவசாயிகள் பேரணி நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திரா காந்திக்கு எதிரான தீர்ப்பு தைரியம் மிக்கது - தலைமை நீதிபதி ரமணா