ETV Bharat / bharat

மத்திய பட்ஜெட்டை விமர்சித்து ’அல்வா’ கொடுக்கும் போராட்டம் - மத்திய பட்ஜெட்டை எதிர்த்து ’அல்வா’ கொடுக்கும் நூதன போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிவித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பட்ஜெட்டை எதிர்த்து ’அல்வா’ கொடுக்கும் நூதன போராட்டம்

author img

By

Published : Feb 3, 2022, 10:46 AM IST

புதுச்சேரி: மத்திய பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் (பிப்ரவரி 1) தாக்கல்செய்தார். இதில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும் புதுச்சேரிக்கு என்று தனி நிதி ஒதுக்கப்படவில்லை, வேலைவாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறி அதனைக் கண்டித்து புதுச்சேரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தலைவர் ஆனந்த் தலைமையில் காமராஜர் சிலை முன்பு நேற்று (பிப்ரவரி 2) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து கோஷம் எழுப்பிய அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சிக்னலில் இருந்த பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அல்வா கொடுக்கும் போராட்டம்

இது குறித்து ஆனந்த் கூறும்போது, ”மத்திய பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. அதே வேளையில் லாபத்தில் இயங்கக்கூடிய மின் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்வகையில் பொதுமக்களுக்கு இன்று அல்வா கொடுத்து போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். மேலும் பலகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'வளர்ந்துவரும் பாரதிய ஜனதா; அச்சத்தில் முதலமைச்சர்!'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.