ETV Bharat / bharat

காற்று மாசில் மூச்சுத் திணறும் இந்திய நகரங்கள்

ஆண்டுக்கு 12 லட்சம் உயிர்களைப் பலிவாங்கும் காற்று மாசு பற்றி நமக்கிருக்கும் அலட்சிய மனப்பான்மையை விட்டொழிப்பதுதான் வளிமண்டலத் தன்மை மேம்பாட்டுக்கு இட்டுச் செல்லும், நாம் எடுத்து வைக்கும் முதல் அடி.

author img

By

Published : Mar 3, 2021, 7:36 PM IST

Air pollution
Air pollution

வளிமண்டலத்தில் தேங்கிக் கிடக்கும் திட, திரவு மாசுக்கழிவுகள் (பர்ட்டிகுலேட் மேட்டர்) குவியலின் விளைவாக தேசம் கடுமையான பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தேசத்தில் நிகழும் மரணங்களில் எட்டில் ஒன்று காற்றுமண்டல மாசினால் ஏற்படுகிறது என்ற சுடும் நிஜத்தை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.

உலகச் சுகாதார அமைப்பு பிரச்சினை இல்லாத நிலைகள் என்று சொல்கின்ற அளவை விட 10, 11 மடங்கு அதிகமாகவே நம் தேசத்தின் வளிமண்டலத்தில் தேங்கிக் கிடக்கின்றன திட, திரவு மாசுக்கழிவுகள். கரோனா தீநுண்மி உச்சத்தில் இருந்த போது அதைக் கட்டுப்படுத்த எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கொண்டுவந்த ஊரடங்குக் காலத்தில் காற்று மாசு கணிசமான அளவுக்கு சரிந்தது என்னமோ உண்மைதான். எனினும், மாசுப்படுத்தும் கழிவுகளின் வீழ்ச்சி குறுகிய காலத்தில் மட்டுமே நிகழ்ந்த ஒரு தற்காலிக நிகழ்வு.

2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நிலவிய காற்று மாசு கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பதிவான காற்று மாசை விட மிக அதிகமாகவே இருந்தது என்று விஞ்ஞான, சுற்றுச்சூழல் மையம் தனது சமீபத்திய அறிக்கையில் சொல்லியிருக்கிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தேசத்தின் 99 மாநகரங்களில் நடத்திய ஆய்வுகளின் தரவுகள் அவற்றில் 43 மாநகரங்களில் அபாயகரமான காற்றுமாசு நிலவுகிறது என்பதைக் காட்டுகின்றன. குருகிராம், லக்னோ, ஜெய்பூர், ஆக்ரா, நவி மும்பை, ஜோத்பூர், விசாகப்பட்டினம் ஆகிய மாநகரங்களும், பிறவும் அவற்றில் அடக்கம். அவுரங்காபாத், இந்தூர், போபால், கொச்சி, கோழிக்கோடு மற்றும் சில மாநகரங்களில் வெப்பநிலை தாழ்ந்தபோது மாசு நிலை அதிகரித்தது என்றும் அந்தத் தரவுகள் சொல்கின்றன.

காற்றுமாசின் அளவிற்கு ஏற்ப ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளில் அனீமியா என்னும் இரத்தச் சோகை நோய் அதிகரிக்கிறது என்று டில்லி இந்திய தொழில்நுட்பக் கழகமும், ஹார்வர்டு பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. காற்றுமாசு மோசமாகிக் கொண்டிருக்கும் இந்த ஆபத்தான காலக்கட்டத்தில் காற்றின் தன்மையை மேம்படுத்துவற்கான நிதி ஒதுக்கீட்டை தனது நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு குறைத்துவிட்டது என்பது துயரளிக்கும் ஒரு நகைமுரண். விஞ்ஞான, சுற்றுச்சூழல் மையம் சொன்னதையாவது மனதில் வைத்து மத்திய அரசு இந்த நிலையைச் சரிசெய்ய வேண்டியது அவசியம்.

தொடர்ந்து காற்று மாசினால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை, கிட்னிகளின் பணி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என்றுவேறு சொல்லப்படுகிறது. காற்றின் தன்மைக்கேற்ப நெஞ்சக நோய்களின் அபாயம் ஏறிக்கொண்டே போகிறது. வளிமண்டலத் தன்மையை மேம்படுத்த உருவாக்கப்பட்ட தேசிய செயல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் கடுமையான தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன.

பழைய அனல்மின் நிலையங்களை மூட வேண்டும் என்றும், கழிவு மேலாண்மையை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் பரிந்துரை செய்திருக்கிறது. ஆயினும், அந்த மாதிரியான அறிவுள்ள அறிவுரைகளைக் கேட்பார்கள் இப்போது யாரும் இல்லாதது போலத் தோன்றுகிறது. இருக்கின்ற மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை கூட யாரும் மதிப்பது போலவும் தோன்றவில்லை.

தங்கள் மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சியை பரப்பிக் கொண்டிருக்கும் தேசங்கள் தங்கள் பூகோளப் பகுதிகளில் இருக்கும் நீரின், காற்றின் தன்மைகளை மேம்படுத்தும் திறன் படைத்தவைகளாக விளங்குகின்றன. இந்தோனேசியா போன்ற நாடுகள் பசுமையை எங்கும் பரப்புவதற்கும், கரிமக் கழிவுகளில் மீத்தேனை எடுப்பதற்கும் பெரியதோர் முக்கியத்துவத்தை அளிக்கின்றன. பெர்லின், ஷாங்கை, லண்டன், மாட்ரிட், சியோல் போன்ற மாநகரங்கள் சிறந்த பொதுமக்கள் போக்குவரத்து அமைப்புகளைக் கொண்ட மாநகரங்கள் என்ற பேரைச் சம்பாதித்து இருக்கின்றன. அந்த மாநகரங்களில் வாகனப் புகை மாசையும், மற்றும் பிற மாசு வகைகளையும் கட்டுப்படுத்தும் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.

1998-லிருந்து 15 வருடங்களுக்கு எரிபொருள் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் கடமையை மேற்கொண்டது சீனா. ஒவ்வொரு ஆண்டும் மாசுக் கட்டுப்பாட்டில் புதிய புதிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை பூர்த்தியும் செய்கின்றது அந்தச் செஞ்சீனாத் தேசம். கடந்த வருடத்தில் பீஜிங்கில் வளிமண்டலத் திட, திரவு மாசுக்கழிவு ஒரு கனமீட்டருக்கு 38 மைக்ரோகிராம் என்ற அளவிலே பதிவானது.

இந்த வருடம் அதை 34.5 மைக்ரோகிராம் அளவுக்குக் குறைப்பது என்ற ஓர் இலக்கை நிர்ணயித்திருக்கிறது சீன அரசாங்கம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் முற்றிலும் நிலக்கரிப் பயன்பாட்டை ஒழித்துவிட்டு அதற்குப் பதிலாக மாற்று எரிபொருள்களை அறிமுகம் செய்வதென்று சீனா அறிவித்திருக்கிறது. நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தும் புதிய தொழில்களுக்கு சீன அரசு தடை விதித்திருக்கிறது. காடுகளைப் பேணுகின்ற ஓர் அமைப்பை அந்த நாடு உருவாக்கி வைத்து இருக்கிறது. மாசினை ஏற்படுத்தும் தொழில்களைக் கட்டுப்படுத்த ஒரு திட்டத்தையும் அது கொண்டு வந்திருக்கிறது.

இந்தியாவும்தான் வளிமண்ட மேம்பாட்டுக்காக சட்டங்களையும், வழிமுறைகளையும் கொண்டு வந்தது. என்றாலும், நம் தேசத்தில் இந்த விசயத்தில் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. அதிகாரிகளிடமும், குடிமைச் சமூகத்திலும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு சுத்தமாக இல்லாமல் போனதுதான் அதற்குக் காரணம். ஆண்டுக்கு 12 லட்சம் உயிர்களைப் பலிவாங்கும் காற்று மாசு பற்றி நமக்கிருக்கும் அலட்சிய மனப்பான்மையை விட்டொழிப்பதுதான் வளிமண்டலத் தன்மை மேம்பாட்டுக்கு இட்டுச் செல்லும், நாம் எடுத்து வைக்கும் முதல் அடி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.