ETV Bharat / bharat

மஸ்கட் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு.. அவரசமாக தரையிறக்கம்! - விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் அதே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
author img

By

Published : Jan 23, 2023, 3:24 PM IST

Updated : Jan 23, 2023, 3:35 PM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் அதே விமான நிலையத்தில் தரையிறங்கியது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கடிற்கு விமானம் புறப்பட்டது.

கொச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம் 105 பயணிகளுடன் மஸ்கடிற்கு காலை 8.30 மணிக்கு புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தில் தீடிரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் விமான நிறுவன ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து விமானம் நிறுவனம் கூறுகையில், விமானத்தின் முகாமைத்துவத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் 22 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிப்பு

Last Updated : Jan 23, 2023, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.