ETV Bharat / bharat

Air Force Rescue: ஹெலிகாப்டர் மூலம் 11 பேரை மீட்ட விமானப்படை - ஆந்திராவில் ஹெலிகாப்டர் மூலம் 11 பேரை மீட்ட விமானப் படை

ஆந்திரா சித்ராவதி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் (Andhra Floods) சிக்கிய 11 பேரை இந்திய விமானப்படையினர் (Air Force Rescue) ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.

Air Force Rescue, Air Force personnel rescued 11 people with help of Helicopter, ஹெலிகாப்டர் மூலம் 11 பேரை மீட்ட விமானப்படை, ஆந்திரா வெள்ளம்
Air Force Rescue
author img

By

Published : Nov 20, 2021, 10:39 AM IST

அமராவதி: ஆந்திராவில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. திருப்பதி உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சித்ராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, காரில் சென்று இருவர் அந்த வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை மீட்க சம்பவ இடத்திற்கு பொக்லைன் ஒன்று கொண்டுவரப்பட்டு, காரில் இருந்த இருவரை மீட்டனர். அப்போது வெள்ளத்தின் வேகம் அதிகமான நிலையில், பொக்லைன் இயந்திரமும் வெள்ளத்தில் சிக்கியது.

பத்திரமாக மீட்பு

இதனால், காரில் இருந்த இருவர் உள்பட மொத்தம் 11 பேர் அந்த வெள்ளத்தில் சிக்க தவித்தனர். அவர்களை மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் மீட்கும் முயற்சி பின்னடைவைச் சந்தித்தது.

ஹெலிகாப்டர் மூலம் 11 பேரை மீட்ட விமானப்படை

இதையடுத்து, விமானப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சித்ராவதி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த 11 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அவர்களைக் கொண்டுசென்றனர்.

இதையும் படிங்க: Tirumala Rains - தீவு போல் மாறிய திருப்பதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.