அடுத்தாண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் பரப்புரை தொடங்கி, தீவிரமாக நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (டிச. 12) அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி, அக்கட்சியின் மேற்கு வங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார்.
பின்னர் பேசிய அசாதுதீன் ஓவைசி, “வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மேற்கு வங்க நிர்வாகிகளைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. மாநிலத்தில் நிலம் அரசியல் சூழல் குறித்து கலந்தாலோசித்தோம். கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்குன் நன்றி” எனத் தெரிவித்தார்.
ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, மேற்கு வங்க தேர்தலில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. நிறைய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், இடதுசாரிகளின் வாக்குகளை (இஸ்லாமியர்களின் வாக்குகள்) கணிசமாகப் பிரிக்கும் எனக் கூறப்படுகிறது. இது, பாஜகவுக்கு ஆதாயமாக அமையும் என அரசியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.
இதையும் படிங்க...பாஜக மேலிட பொறுப்பாளரைச் சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ: கட்சி பதவி பறிப்பு