நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு, சாலைப் போக்குவரத்து குறித்த முக்கியத் தகவலை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
’இந்தியாவில் சாலை மேம்பாடு’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஆண்டு கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், ”நாள்தோறும் சராசரியாக 40 கி.மீ நெடுஞ்சாலை அமைக்க சாலைப் போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்குள் 60 ஆயிரம் கிமீ தூரத்திற்கான தேசிய நெடுஞ்சாலை உலகத் தரத்தில் கட்டமைப்பதே எனது இலக்கு. உலகளவில் இரண்டாவது பெரிய சாலைப் போக்குவரத்து வசதி கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. எனவே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலைக் கட்டமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது.
எனவே, நாட்டின் உள்கட்டமைப்பு வசதிக்கு 111 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனாவுக்கு 43 ஆயிரம் பேர் பாதிப்பு!